மைக்ரோவேவ் பொப் கார்ன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோளன் (சோளவிதைகள்) - 1 கைப்பிடி

பெரிய பாத்திரம் & மூடி

செய்முறை:

பாத்திரத்தில் சோளவிதைகளைப் போட்டு ஒரு பேப்பர் டவல்/டிஸ்யூ பேப்பரால் மூடி அதன் மேல் மூடி வைத்து மைக்ரோவேவில் 6- 8 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

சுவையான பொப் கார்ன் தயார். விரும்பியபோது ஸ்னாக்ஸாக சாப்பிடலாம்.

குறிப்புகள்:

விரும்பினால் சோளவிதைகளுடன் 1 - 2 மேசைக்கரண்டி பட்டர் சேர்த்தும் செய்யலாம். அவரவர் மைக்ரோவேவின் தன்மைக்கேற்ப நேரத்தை கூட்டி குறைக்கலாம். ஒரு தடவை செய்து பார்த்தால் எவ்வளவு நேரம் தேவைப்படும் என கணித்துக் கொள்ளலாம். இலங்கையில் மணல் மண்ணை கழுவி காய வைத்து பின்னர் அதனை இரும்பு சட்டியில் போட்டு வறுத்து சூடாக்கி அதனுள் சோளவிதைகளைப் போட்டு வறுப்பார்கள். சோளவிதை வெடித்து பூப்போல மேலே வரும். அதனை மணல் இல்லாமல் அள்ளி எடுப்பார்கள். கச்சான்(வேர்க்கடலை), சோளன் இல்லாமல் அங்கு எந்த ஒரு கோவில் (இந்து, கிறிஸ்தவ, பௌத்த) திருவிழாக்களும் நடைபெறுவதில்லை. வறுத்த கச்சானுடன் (வேர்க்கடலை) சோளன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.