மெக்ஸிகன் சாட்டேட் ஷிரிம்ப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - அரைக்கிலோ

சிவப்பு வெங்காயம் - ஒன்று

பூண்டு - நான்கு பற்கள்

ஜாலப்பீனோ பெப்பர் - ஒன்று

வேகவைத்த சோளம் - ஒரு கோப்பை

பெப்ரிக்கா பவுடர் - அரைத்தேக்கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி

தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி

சில்லி பவுடர் - அரைத்தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு பிடி

ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

இறாலை சுத்தம் செய்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். ஜாலப்பீனோ பெப்பரை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

ஒரு நாண்ஸ்டிக் சட்டியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், பூண்டு, ஜாலப்பீனோ பெப்பரைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு சுத்தம் செய்துள்ள இறாலைப்போட்டு அதனுடன் உப்பு மற்றும் எல்லாத்தூளையும் போட்டு கிளறவும்.

பிறகு சோளத்தை கொட்டி நன்கு கிளறவும். இறால் நன்கு வேகும் வரை கிளறி விட்டு எலுமிச்சைச்சாற்றை ஊற்றி கொத்தமல்லியைத்தூவி இறக்கி விடவும்.

குறிப்புகள்: