மெக்சிகன் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காராமணி - அரை கப் (முளைக்கட்டியது)

பச்ச பயறு - அரை கப் (முளைக்கட்டியது)

ராஜ்மா - அரை கப்

சின்ன வெங்காயம் - அரை கப் (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு - அரை கப் (வேக வைத்தது)

லெட்யூஸ் லீஃப் - அரை கப் (பொடியாக நறுக்கியது)

பேஸ்டாக்கி கொள்ள:

டொமேடோ சாஸ் - மூன்று டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - அரை டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:

முதல் நாள் இரவே காராமணி, பச்ச பயறு ஊற வைத்து முளைக்கட்டி எடுத்து வைத்து கொள்ளவும். ராஜ்மாவையும் ஊற வைக்கவும்.

மூன்று பயிரையும் பசையாகாமல் உதிரியாக வேக வைத்து கொள்ள வேண்டும்.

வெந்த பயறில் உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், தக்காளி, லெட்டியூஸ் எல்லாவற்றையும் போட்டு மிக்ஸ் பண்ண வேண்டும்.

இப்போது டொமேடோ சாஸில், எலுமிச்சை, உப்பு, மிளகு தூள், சர்க்கரை கலவையை பேஸ்டாக்கி பயறு கலவையில் போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணவேண்டும்.

குறிப்புகள்:

கொஞ்ச சாலடுக்காக முளை கட்ட முடியாது ஆகையால் தனித்தனியாக ஒரு ஒரு கப் அளவுக்கு முளை கட்டி வேக வைத்து கொண்டால் தேவைக்கு எடுத்து கொண்டு மீதியை ஒரு நாள் சுண்டலும் செய்யலாம் (அ) இதே சாலடும் செய்யலாம்.இல்லை பொரியாலிலும் சேர்க்கலம்.