முட்டை மற்றும் சாசேஜ் ரோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மெல்லிய சாஃப்ட் பிரெட் - 4 துண்டுகள் முட்டை - 2 சாசேஜ் - 50 கிராம் மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி பட்டர்/மாஜரின் - பிரெட்டில் பூசுவதற்கு

செய்முறை:

சாசேஜ் ரோஸ்ட் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாண் துண்டுகளை கரையை நீக்கி விட்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள்

உப்பு போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் சாசேஜை போட்டு நன்கு வாட்டி எடுத்து முட்டை கலவையில் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

மிகுதியான எண்ணெய் ஊற்றி இந்த கலவையை அப்பம் போல குறைந்த தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். ப்ரெட் துண்டுகளில் ஒரு பகுதியில் மட்டும் மாஜரின்/பட்டரை நன்கு பூசி விடவும்.

இப்பொழுது செய்து வைத்திருக்கும் அப்பத்தை ப்ரெட்டின் அளவிற்கு நறுக்கி ப்ரெட்டின் உள்ளே வைத்து மூடி அதை டோஸ்டரில் வைக்கவும். டோஸ்டரின் லைட் சிவப்பு நிறமாக மாறும் வரை டோஸ்ட் செய்யவும்.

லைட் சிவப்பு நிறத்திற்கு மாறியதும் உடனேயே ப்ரெட்டை வெளியில் எடுத்து விடவும். அழகாக வெட்டப்பட்டிருக்கும் அல்லது அந்த அடையாளத்தின் மேலே மெதுவாக கத்தியால் வெட்டி பிரிக்கவும். சுவையான எளிதில் செய்யக்கூடிய சாசேஜ் ப்ரெட் ரோஸ்ட்.

குறிப்புகள்: