முட்டை சாண்ட்விட்ச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த முட்டை - ஒன்று ப்ரெட் - 8 ஸ்லைஸ் வெண்ணெய் - 2 தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி நெய் - தேவையான அளவு உப்பு - தேவைக்கு

செய்முறை:

முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த முட்டையை தேங்காயை துருவுவது போல் துருவி எடுக்கவும். அதனுடன் வெண்ணெய்

மிளகு தூள்

உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

ப்ரெட்டின் ஒரத்தை நீக்கி விட்டு நடுவில் முட்டை கலவையை வைக்கவும். அதன் மேல் மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும்.

இதைப் போல் மற்றொரு ப்ரெட்டிலும் செய்து டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்து எடுக்கவும். அல்லது தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு இரண்டு பக்கங்களும் சிவக்கும் படி வாட்டி எடுக்கவும்.

எளிதில் செய்து விடக்கூடிய காலை நேர சிற்றுண்டி தயார். இது ஒரு இத்தாலியன் ரெசிபி.

குறிப்புகள்: