மீங்கொரிங்
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
கொத்துக்கறி - 1/4 கிலோ
இறால் - 20
முட்டை - 4
கேரட் - 3(துருவியது)
வெங்காயம் - 1
பூண்டு - 3 பற்கள்
மிளகு தூள்,உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - தேவையான அளவு
அஜினமோட்டோ - சிறிது
எண்ணெய் - சிறிது
செய்முறை:
தேவையான பொருள்களை தயாரா எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய சட்டியில் கால் பங்கு நீர் ஊற்றி சூடு வந்ததும் அதில் நூடுல்சை போட்டு குழைய வேக விடாமல் எடுத்து வடிகட்டவும்.
வடிகட்டிய நூடுல்சில் குளிர்ந்த நீர் ஊற்றி வைக்கவும்.பின் அதை கத்தரிக்கோலால் வெட்டிவைக்கவும்.
வேரொரு சட்டியில் முதலில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம் & பூண்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கியதை நூடுல்சை வேக வைத்த சட்டியில் கொட்டவும்.
இதே போல் கேரட்டுடன் சிறிது மிளகு தூள் & உப்பு சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் வதக்கி வெங்காயம் உள்ள சட்டியில் கொட்டவும்.
அடுத்தது சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி இறாலுடன் மிளகு & உப்பு சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
அடுத்தது எண்ணெய் ஊற்றாமல் கொத்துக்கறியுடன் மிளகு & உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி கொட்டவும்.
கடைசியாக கொஞ்சம் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றி மிளகு & உப்பு சேர்த்து கொத்தி விட்டு அதையும் அந்த சட்டியில் கொட்டவும்.
எல்லாம் போட்டபின் நூடுல்சையும் போட்டு அதில் சோயா சாஸ் சிறிது ஊற்றவும்.
இப்பொது இதனுடன் கொஞ்சம் அஜினோமோட்டொ சேர்த்து அடிப்பை மிதமான தீயில் வைத்து அனைத்தையும் சேரும்படி கிளரவும்.