மில்க் மெய்ட் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாஜரீன் - 250 கிராம்

மில்க் மெயிட் - 1 ரின்

மைதாமா - 400 கிராம்

ரவை - 100 கிராம்

சீனி - 250 கிராம்

முந்திரிப் பருப்பு - 100 கிராம்

உலர்ந்ததிராட்சை - 100 கிராம்

தண்ணீர் - 1 டம்ளர்

பேக்கிங்பவுடர் - 2 மேசைக்கரண்டி

பனானா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

ரவையை வறுத்து வைக்கவும்.

மைதாவுடன் பேக்கிங்பவுடரை சேர்த்து 5 அல்லது 6 முறை சலித்து வைக்கவும்.

மாஜரீனையும் சீனியையும் சேர்த்து க்ரீமாகும் வரை அடிக்கவும்.

பின்பு மில்க் மெயிட்டை சேர்த்து ஒரு முறை அடிக்கவும்.

மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.

கலவை இறுக்கமாக இருந்தால் தண்ணீரை அளவாக விட்டுக் கலக்கவும்.

முந்திரி, திராட்சை, எசன்ஸ்சையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

அவனை முன்கூட்டியே சூடாக வைக்கவும்.

கேக் ட்ரேயில் கலவையை ஊற்றி 45 நிமிடம் பேக் செய்யவும்.

ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

குறிப்புகள்:

பனானா எசன்ஸ் இல்லாவிட்டால் வெனிலா எசன்ஸ் பாவிக்கலாம். மாவை சேர்த்து அடிக்கக்கூடாது. மரக்கரண்டியால் கலக்க வேண்டும். அப்பொழுதுதான் கேக் மென்மையாக இருக்கும்.