மால்வானி சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - கால் கிலோ வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு தயிர் - ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப அரைக்க 1 : இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - ஒன்று மல்லி தழை - சிறிதளவு அரைக்க 2 : சோம்பு - கால் தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒன்று இஞ்சி - மிக சிறிய துண்டு பூண்டு - 2 பல் மல்லி தழை - சிறிதளவு வெங்காயம் - பாதி அரைக்க 3 : தேங்காய் - 2 மேசைக்கரண்டி பட்டை - சிறிய துண்டு கிராம்பு - ஒன்று ஏலக்காய் - ஒன்று தனியா - கால் தேக்கரண்டி மிளகு - கால் தேக்கரண்டி கசகசா - கால் தேக்கரண்டி முந்திரி - 5 காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - ஒன்று பூண்டு - 2 பல் பிரிஞ்சி இலை

பெருங்காயம்

பட்டை

கிராம்பு

எண்ணெய் - தாளிக்க மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:

அரைக்க 1 லிஸ்டில் கொடுத்துள்ளதை அரைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து இந்த கலவை மற்றும் தேவையான அளவு உப்பு

மஞ்சள் தூள்

எலுமிச்சை மற்றும் தயிர் சேர்த்து பிசறி ஊற வைக்கவும்.

அரைக்க 2 என்று கொடுத்துள்ளதில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.

அரைக்க 3 என்று கொடுத்துள்ளதில் எல்லாவற்றையும் எண்ணெயில்லாமல் வறுத்து பொடித்து வைக்கவும்.

எண்ணெயை சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும். பொரிந்ததும் பொடியாக அறிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இரண்டாவது மசாலாவை சேர்த்து வதக்கவும்.

இரண்டொரு நிமிடம் வதக்கி தக்காளி

மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு (ஏற்கனவே சிக்கனில் உப்பு இருக்கு) சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

இப்பொழுது ஊற வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

மசாலா சிக்கனில் நன்கு பரவியதும் அரைத்து வைத்துள்ள மூன்றாவது மசாலாவை சேர்க்கவும்.

ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து மிதமான தீயில் முப்பது நிமிடம் அல்லது சிக்கன் வேகும் வரையில் வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும். இது சுடு சாதம்

சப்பாத்தி

மால்வானி பூரியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்புகள்: