மாலத்தீவு வெஜிடபிள் கறி
தேவையான பொருட்கள்:
காய் கலவை: கேரட்
பீன்ஸ்
உருளை
காலிஃப்ளவர்
ப்ராக்கலி சுக்கினி
கத்தரிக்காய்
பூசணிக்காய் - ஒரு பெரிய கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 2 பட்டை - ஒரு துண்டு ஏலக்காய் - 3 லவங்கம் - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து பந்தன் / ரம்பை இலை - 2 துண்டுகள் (விரும்பினால்) இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - ஒரு பல் மிளகாய் துள் - கால் தேக்கரண்டி கறி தூள் - 2 தேக்கரண்டி சீரகத் தூள் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது தேங்காய் பால் - 250 மில்லி உப்பு எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
காய்களை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை
லவங்கம்
ஏலக்காய் தாளித்து
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
கறிவேப்பிலை
பந்தன் இலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
தூள் வாசம் போனதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
இதில் 3 மேசைக்கரண்டி அளவு தேங்காய் பால் விட்டு மசாலா விழுது போலானதும்
நறுக்கிய காய் கலவை சேர்த்து சில நிமிடம் பிரட்டவும்.
பின் மீதமுள்ள தேங்காய் பால்
250 மில்லி நீரும் விட்டு
உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் சிறு தீயில் மூடி வைத்து வேக விடவும். இது 20 - 30 நிமிடங்கள் வரை இதே தீயில் கொதிக்க வேண்டும். காய் முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வெந்து விடும்.
சுவையான மாலத்தீவு வெஜிடபிள் கறி தயார்.