மார்னிங் ஃபுரூட் பிஸ்ஸா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரெடிமேட் பிஸ்ஸா ஷெல் - ஒன்று ( 12")

நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி - ஒரு கோப்பை

புளூபெர்ரி - ஒரு கோப்பை

ராஸ்பெர்ரி - அரைக்கோப்பை

நறுக்கிய கீவீ - ஒரு கோப்பை

லெமன் சாஸ் - ஒரு கோப்பை

தேன் - இரண்டு மேசைக்கரண்டி

ஆரஞ்சு ஜூஸ் - அரைக்கோப்பை

ஜெலட்டின் - ஒரு பாக்கெட் (7g)

செய்முறை:

பிஸ்ஸா ஷெல்லை பொதியிலுள்ள முறைப்படி பேக் செய்துக் கொள்ளவும்.

பிறகு முதலில் லெமன் ஸ்பிரெட்டை பரவலாக பூசவும். அதைத்தொடர்ந்து பழங்களை பரவலாக அடுக்கி வைக்கவும்.

பிறகு ஜெலட்டினை ஆரஞ்சு ஜூஸில் போட்டு அடுப்பில் வைத்து குறைந்த அனலில் கலக்கவும். ஜெலட்டின் கரைந்தவுடன் தேனைச் சேர்த்து கலக்கி ஆறவைத்து தயாரித்துள்ள பிஸ்ஸாவின் மீது பழங்களின் மீது பரவலாக ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடவும்.

மறு நாள் காலையில் வெளியில் எடுத்து துண்டுகள் செய்து காலை உணவாக பரிமாறவும்.

குறிப்புகள்: