மாதுளை கொய்யா சட்னி
தேவையான பொருட்கள்:
கொய்யாப்பழம் (முற்றியவிதைகளற்ற) - ஒரு கப்
முற்றிய)மாதுளம்பழ முத்துகள் - ஒரு கப்
செத்தல்மிளகாய் - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு
உள்ளி(பூண்டு) - ஒரு பல்
வெங்காயம் - அரைப்பாதி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பூ - 2 கப்
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - கால் பாதி
செய்முறை:
கொய்யாப்பழம், மாதுளம்பழ முத்துகள், பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம்(கால்பாதி), உப்பு, உள்ளி(பூண்டு) இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக அரைக்கவும்.
நன்றாக அரைத்த பின்பு தேங்காய்ப்பூ, கறிவேப்பிலை ஆகியவற்றையும் போட்டு நன்றாக அரைக்கவும்.
பின்பு ஒரு வாணலியில்(தாச்சியில்)எண்ணெய் விட்டு அது கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம்(கால்பாதி) போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்தவை, தாளித்தவை, கறிவேப்பிலை, தேசிக்காய் சாறு சேர்த்து கலக்கவும்.அதன் பின்பு பரிமாறவும்.
குறிப்புகள்:
மாதுளை கொய்யா சட்னியில் விற்றமின் A, B1, B2, B3, C, கல்சியம், மினரல், பொட்டாஷியம், மக்னீஸியம், இரும்பு, நார்ச்சத்து, பொஸ்பரஸ், கார்போஹைட்ரேட் இவை யாவும் நிறைந்து காணப்படும். அத்துடன் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும் ஆகும்.
எச்சரிக்கை - இருதயநோயாளர், மாதுளம்பழம், கொய்யாப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.