மஸ் ஹுனி ரோஷி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டூனா மீன் - ஒரு டின் மைதா மாவு - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தேங்காய் துருவல் - கால் கப் பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - சிறிது மிளகு தூள் - சிறிது எலுமிச்சை - பாதி இஞ்சி - ஒரு துண்டு உப்பு

செய்முறை:

மைதா மாவுடன் உப்பு கலந்து வெது வெதுப்பான நீர் விட்டு பிசைந்து வைக்கவும். டூனா மீனை பிழிந்து உதிர்த்து

அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்

பச்சை மிளகாய்

கறிவேப்பிலை

இஞ்சி சேர்த்து கலந்து விடவும்.

மீன் கலவையுடன் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.

பின் தேங்காய் துருவல்

எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கைகளால் பிரட்டி வைக்கவும்.

மாவை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து லேசாக திரட்டி உள்ளே மீன் கலவையை வைத்து மூடவும்.

அதை ஸ்டஃப்டு பராத்தா போல் சற்று திக்காக திரட்டி

சூடான தோசைக் கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

சுவையான மஸ் ஹுனி ரோஷி தயார்.

குறிப்புகள்: