மலேசியா பச்சடி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பழுத்த அன்னாசி பழம் - ஒன்று

பழுத்தமிளகாய் - 2

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 4 பரல்

சின்ன வெங்காயம் - 10

மஞ்சள்பொடி - சிறிது

சீனி - 2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் - 2 ஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

செய்முறை:

அன்னாசி பழத்தை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். (தண்ணீர் சேர்க்காமல்)

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போடவும். சின்ன வெங்காயத்தை நீட்டமாக அரிந்து போடவும்.

பச்சை மிளகாய், பழுத்த மிளகாய், பூண்டையும் நீளமாக அரிந்து போட்டு வதக்கவும்.

பின்பு ஒரு 4 ஸ்பூன் நீர் விட்டு, உப்பு, மஞ்சள் பொடி, சீனி போட்டு ஒரு கொதி வந்ததும் வேக வைத்த அன்னாசிப்பழத்தை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

வித்தியாசமாகவும் அதே சமயத்தில் ருசியாகவும் இருக்கும்.

குறிப்புகள்:

என் மலாய் தோழி மூலம் இந்த ரெசிபியை கற்றுக் கொண்டேன். மலாய்காரர்களின் கல்யாணம், மற்ற விஷேசங்களிலும் பிரியாணியுடன் இந்த பச்சடி பரிமாறப்படும்.

டின்னில் அடைக்கப்பட்ட அன்னாசி பழத்தையும் பயன்படுத்தி செய்யலாம். ஆனால் அதில் உள்ள சிரப்பை சேர்க்க வேண்டாம்