மலேசியன் சிக்கன் ட்ரைகறி
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் துண்டு - 1/4 கிலோ
வெங்காயம் - 1 (mikap பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 3 (துண்டுக்களாக்கியது)
கெட்டித்தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
நல்லமிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சில்லிப்பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1/2 மூடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அதில் நல்லமிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு மற்றும் சிறிது உப்பு கலந்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் விட்டு அதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளாகயை பிச்சுப்போட்டு, சில்லிப்பேஸ்டும் போட்டு நன்றாக கிண்டவும்.
ஊறவைத்துள்ள சிக்கன் துண்டுகளைப்போட்டு சுருள வதக்கவும். 5 நிமிடம் கழித்தப்பின்னர் மஞ்சள்தூள் தூவவும்.
தேங்காய்ப்பால் ஊற்றி சிக்கனை வேகவைக்கவும். மிதமான தீயில் சிக்கன் வேகவைக்க சிறிது தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்.
சிக்கன் வெந்து வரும் வேளையில் தேவையான அளவு உப்பு போடவும்.
சிக்கன் வெந்து உப்பு எல்லாம் சரியாக இருக்கும் போது தேங்காய்த்துருவலைத்தூவி நன்றாக சுருள வதக்கவும். எல்லாமும் கலந்து கறி ட்ரையாகி வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்புகள்:
இந்த மலேசியன் சிக்கன் ட்ரைகறி சப்பாத்தி, நாண், ரசம் சாதம் இவற்றிக்கும் நல்ல ஒரு பொருத்தம்.