மயோ சிக்கன் மற்றும் வெஜ் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ

சீனி - 3 கப்

தேங்காய் துருவியது - 1 கப்

ஏலக்காய் - 3 பொடித்தது

பாண்டன் இலைகள் (ரம்பை இலைகள்) - 4

உப்பு - 2 சிட்டிகை (பின்ச்)

நெய் அல்லது எண்ணெய் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை வெட்டிப் போட்டு மிக்சியில் நன்றாக துருவிக் கொள்ளவும். சிப்ஸ் துருவியில் சிறிதாக (தேங்காய்ப்பூ போன்று ) துருவ முடிந்தால் அதிலேயே துருவிக் கொள்ளலாம்.

துருவிய தேங்காய், துருவிய மரவள்ளிக்கிழங்கு, சீனி, உப்பு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு பிசையவும்.

பிசைந்ததை நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மேல்பறப்பை சமன் செய்யவும். அதன் மேல் பாண்டன் இலைகளை வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் (இட்லி பாத்திரம் அளவில்) 3 கப் தண்ணீர் ஊற்றி, அதனுள் மரவள்ளிக்கிழங்கு கலவை உள்ள பாத்திரத்தை வைத்து ஒரு மூடியால் மூடி அடுப்பில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து ஒரு குச்சியை மரவள்ளிக்கிழங்கு கலவையில் விட்டுப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம். சரியாக வெந்திருக்காவிட்டால் குச்சியில் ஒட்டிக் கொண்டு வரும். இன்னும் ஒரு 10 நிமிடங்கள் சென்று மீண்டும் குச்சியை வைத்து டெஸ்ட் செய்து பாருங்கள்.

வெந்தப் பிறகு அடுப்பினை அணைத்து குளிர விட்டு பிறகு கிண்ணத்தில் உள்ள ஸ்வீட்டை துண்டுகளாக நறுக்கி பரிமாறுங்கள்.

குறிப்புகள்:

மலேஷியாவில் மிகவும் பிரபலமான ஸ்வீட் இது. Nyonya Cuisine என்பது மலேஷியன், சைனீஸ் ப்யூஷன் உணவுகள் என்றும் சொல்லலாம்.

இதனை பாண்டன் இலைகளில் சுற்றி வைத்து ஆவியில் வேக வைத்தும் விற்பார்கள். இலையின் மணத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் பாண்டன் இலைகள் பிரெஷ்ஷாக கிடைக்காத பட்சத்தில் காய்ந்த பாண்டன் இலைகள் இப்படி கலவையின் மேல் பரத்தி வைத்து வேக விடலாம். இலையின் சாறு கலவையில் இறங்கி நன்றாக இருக்கும். மரவள்ளிக்கிழங்கிற்கு பதிலாக கவுனி அரிசி ( வெள்ளை கவுனி அரிசி (Sticky Rice) நன்றாக இருக்கும். கருப்பு கவுனி அரிசி அத்தனை நன்றாக இருக்காது ) உபயோகித்தும் செய்வார்கள். மரவள்ளிக்கிழங்கு கிடைக்காத இடங்களில் ஏஷியன் ஷாப்களில் Frozen Cassava என்ற பெயரில் ப்ரோசன் மரவள்ளிக்கிழங்குகள் கிடைக்கும். அதனை உபயோகித்தாலும் நன்றாக இருக்கும். ஏலக்காய் பொதுவாக சேர்க்க மாட்டார்கள். சேர்த்தால் நன்றாக இருக்கும்.