மயோனீஸ் முட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

மயோனீஸ் - 2 tbsp

மிளகு தூள் - 1 tsp

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:

முட்டையை வேகவைத்து ஆறியபின் பாதியாக வெட்டி வைக்கவும்.

உள்ளே இருக்கும் மஞ்சள் கருவை எடுத்து அதனுடன் மயோனீஸ் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.

எட்டு சிறு சிறு உருண்டைகள் உறுட்டி ஒவ்வொரு பாதி முட்டையில் வைக்கவும்.

கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

பார்க்கவும் சாப்பிடவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாபிடுவர்.