மட்டன் சாப்ஸ் ரெட் கிரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் சாப்ஸ் - அரை கிலோ

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி + ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று (பெரியது)

தக்காளி - ஒன்று (அரைத்தது)

தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவைக்கு

பச்சைமிளகாய் - இரண்டு

காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி

தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

கடைசியில் தூவுவதற்கு:

கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிது

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு மட்டனை சேர்த்து வதக்கி தண்ணீர் கால் டம்ளர் விட்டு தீயை சிம்மில் வைத்து வேகவிட்டு உப்பு சேர்க்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

பிறகு பொடியாக அரிந்த தக்காளி, மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

வெந்து கொண்டிருக்கும் போது அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி நன்கு கொதித்து கிரேவி பதம் வரும் போது சிறிது எண்ணெய், கொத்தமல்லித்தழை, கரம் மசாலா தூவி இறக்கவும்.

குறிப்புகள்:

மட்டன் சாப்ஸ் என்பது ஒரே மாதிரியான பீஸ்ஸாக இருக்கும் ஆட்டில் லெக் சைட் மட்டன், இதை டிரையாகவும், கிரேவியாகவும் தயாரிக்கலாம். எல்லா ஹோட்டல்களிலும் சாப்ஸ் மட்டன் என்பது ரொம்ப ஃபேமஸ்.

ரொட்டி, சாதம், பரோட்டாவிற்கு ஏற்ற சூப்பரான சைட் டிஷ்.