மசாலா உளுந்து பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமா (கோதுமைமா) - 500 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

பால் - தேவையான அளவு

உளுத்தம்பருப்பு - 200 கிராம்

பெருஞ்சீரகம் (தனியா) - 2 தேக்கரண்டி

சின்ன சீரகம் (சீரகம்) - 2 தேக்கரண்டி

செத்தல் மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 4

மிளகு - சிறிதளவு

பட்டர் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர்- தேவையான அளவு

கொதிதண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பை போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு அதனை 1 மணித்தியாலம் ஊறவிட்டு அதனை அரைக்கவும்.

பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருஞ்சீரகம்(தனியா), சின்னசீரகம்(சீரகம்), செத்தமிளகாய்(காய்ந்தமிளகாய்), மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் மைதாமா(கோதுமைமா), உப்பு, பட்டர், பால், கொதிதண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்திக்கு (ரொட்டிக்கு)மா குழைப்பதினை போல குழைக்கவும்.

குழைத்த மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

சிறிய உருண்டைகளாக உருட்டியதன் பின்பு அதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து அதனை ஒரு பலகையில் வைத்து அதனை ரோலரினால் (உருட்டு கட்டையினால்) உருட்டி தட்டையாக்கவும்(அப்பளம் போல தட்டவும்).

பின்பு செய்து வைத்திருக்கும் உளுந்து கலவையில் இருந்து (1- 2)மேசைக்கரண்டி எடுத்து அதனை தட்டையாக்கிய மாவின் நடு பகுதியின் மேல் வைத்து மூடவும்.

மூடிய பின்பு அதனை மீண்டும் உருண்டையாக்கி மீண்டும் ரோலரினால்(உருட்டு கட்டையினால்)உருட்டி தட்டையாக்கவும்(பூரி போல தட்டவும்).

தட்டியபின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பின்பு இதனை போல மற்றைய பூரிகளையும் செய்யவும்.

எல்லாவற்றையும் செய்த பின்பு அவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு அதில் எண்ணெய்விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் தட்டி வைத்திருக்கும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு அதனை பொரித்து எடுக்கவும்.

அதன் பின்பு பூரி தயாராகிவிடும். தயாரான பூரியை இரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

இதனைப் போல எல்லா பூரிகளையும் செய்து பொரித்தெடுத்து வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் மசாலா உளுந்துபூரிகளை வைத்து அதனுடன் கிழங்கு பிரட்டல் கறியுடன் அல்லது ஏதாவது ஒரு பிரட்டல் கறியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

மசாலா உளுந்து பூரி சத்தானது, உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது மிக மிக சுவையானது, பலத்தை தரக்கூடியது அத்துடன் இது பெண் குழந்தைகளுக்கு மிக மிக நல்லது. எச்சரிக்கை - உளுந்து அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர் வைத்தியரின்

ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - விரும்பினால் மைதாமாவுடன் ஒரு முட்டையையும் உடைத்து ஊற்றி சேர்த்து குழைக்கலாம்(சுவை கூடுதலாக காணப்படும்)