மக்ரோனி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மக்ரோனி பாஸ்தா - அரை கிலோ கோழி சதை பகுதி - 300 கிராம் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று கொத்தமல்லித் தழை

புதினா - சிறிது கேரட் - 2 உருளைக்கிழங்கு - 2 கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி இஞ்சி

பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 4 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி சிக்கன் க்யூப் - ஒன்று (விரும்பினால்) உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்

தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். கேரட் மற்றும் உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு பாஸ்தாவை அதில் வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்

தக்காளி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

லேசாக வதங்கியதும் மஞ்சள் தூள்

இஞ்சி

பூண்டு விழுது சேர்க்கவும்.

அதனுடன் சுத்தம் செய்த கோழித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

கோழி வதங்கியதும் கேரட்

உருளைக்கிழங்கு

கொத்தமல்லித் தழை

புதினா சேர்க்கவும்.

பிறகு கரம் மசாலா தூள்

உப்பு

சிக்கன் க்யூப் போட்டு காய்கறிகள் மற்றும் கோழி வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு வேகவிடவும்.

அனைத்தும் வெந்து தண்ணீருடன் இருக்கும் போதே வேக வைத்த பாஸ்தாவை போட்டு

குருமாவுடன் சேர்த்து பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

சுவையான மக்ரோனி ரெடி.

குறிப்புகள்: