பட்டர்மில்க் கார்ன் ப்ரட்
தேவையான பொருட்கள்:
கார்ன்மீல் - ஒரு கப் மைதா (அ) ஆல் பர்ப்பஸ் மாவு - 1/3 கப் பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி சர்க்கரை - 2 மேசைக்கரண்டி முட்டை - ஒன்று மோர்/பட்டர்மில்க் - 1 1/2 கப் எண்ணெய் - கால் கப் உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கார்ன் மீல்
மைதா
பேக்கிங் சோடா
உப்பு
சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையுடன் எண்ணெய்
மோர் சேர்த்து கலந்து வைக்கவும். அடுத்து மாவுக்கலவையை முட்டைக்கலவையுடன் சேர்த்து மென்மையாக கலக்கவும்.
ஒரு 8 x 8 அளவுள்ள பேக்கிங் பாத்திரத்தில் நாண்ஸ்டிக் ஸ்ப்ரே செய்து
கலக்கி வைத்திருக்கும் மாவுக்கலவையை அதில் ஊற்றவும்.
இந்த பேக்கிங் டிஷ்ஷை 425 டிகிரி ஃபேரன்ஹீட் முற்சூடு செய்த அவனில் வைத்து 12 - 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஒரு சிறிய கத்தி
அல்லது டூத்பிக் கொண்டு வெந்து விட்டதை சரிப்பார்த்துக் கொண்டு
வெளியில் எடுத்து ஆற விடவும்.
கொஞ்சம் சூடு ஆறியதும்
துண்டுகள் போடவும்.
சுவையான பட்டர்மில்க் கார்ன் ப்ரட் ரெடி.