ப்ரோட்டீன் உப்மா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அடை மாவு - 2 கப் வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை பட்டாணி - கால் கப் குடை மிளகாய் - ஒன்று காரட் - பாதி பச்சை மிளகாய் - 3 பட்டை

சோம்பு

பூண்டு

கறிவேப்பிலை

எண்ணெய் - தாளிக்க மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சோயா சன்க்ஸ் - 10 கொத்தமல்லி - கொஞ்சம்

செய்முறை:

முதலில் அடை மாவை இட்லி ஊற்றும் தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியபின் நன்றாக உதிர்த்து விடவும். அல்லது நான்காக

எட்டாக வெட்டி மிக்சியில் ஒரு சுத்து சுத்தி எடுக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். தக்காளி

குடை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். காரட்டை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். சோயாவை கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பிழிந்தெடுத்து அதையும் மிக்சியில் சுத்தி எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் வேக்காடாக தான் இருக்க வேண்டும். அப்பொழுது தான் உப்மாவில் அதன் சுவை தனியாக தெரியும்.

தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். தக்காளி சீக்கிரமாக குழைய சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து மூடி வைத்தால் சீக்கிரமே வெந்து விடும். கரண்டியால் அழுத்தினால் நன்கு மசிந்து விடும். மூடி போட்டால் தீயை குறைத்து வைக்க வேண்டும்.

நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். குடை மிளகாய் எந்த கலர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நான் இங்கு சிகப்பு பயன்படுத்தி உள்ளேன்.

காய்கறிகள் ஓரளவு வதங்கியதும் (நிறம் மாறியதுமே) வேக வைத்து உதிர்த்து வைத்துள்ள அடை (இட்லியை) மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். நன்கு கிளறிய பின் உப்பு சரி பார்க்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து தெளித்து விடவும். தீயை குறைத்து சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

ஐந்து நிமிடத்திற்கு பின் உதிர்த்த சோயாவை இதனுடன் சேர்த்து கிளறி சிறிதளவு தண்ணீர் (கால் கப்புக்கும் குறைவாக) தெளித்து மூடி வைக்கவும். இப்பொழுதும் அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும். தேவையெனில் சிறிதளவு எண்ணெய் விட்டு கிளறி மூடலாம்.

ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி சட்னியுடன் பரிமாறவும். சுவையான சத்தான புரதம் நிறைந்த ப்ரோட்டீன் உப்மா தயார். சில நேரங்களில் அடை மாவு அதிமாகி விட்டால் மறு நாளும் அடை சாப்பிட போர் அடிக்கும் போது இந்த மாதிரி செய்யலாம்.

குறிப்புகள்: