ப்ரோக்கோலி சிக்கன் கறி
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
புரோக்கோலி - கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம்மசாலா - கால் ஸ்பூன்
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
பெருஞ்சீரகம் - கால் ஸ்பூன்
கறி மசாலா அல்லது பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகாய் - 1 - 2
தக்காளி - 2
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு
செய்முறை:
சிக்கன் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி தண்ணீரில் நன்கு அலசி வடிகட்டிக் கொள்ளவும்.
புரோக்கோலி, வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி இலை கட் பண்ணி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பெருஞ்சீரகம் போடவும். வெடித்தவுடன், வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.
பின்பு புரோக்கோலியை சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கவும். சிக்கனை சேர்க்கவும், கறி மசாலா சேர்த்து, தக்காளி, உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வேகவிடவும். கரம் மசாலா சேர்க்கவும், திரும்ப 5-10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
சிக்கன் வெந்து சாஃப்ட் ஆனவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான புரோக்கோலி சிக்கன் கறி ரெடி. இதை நாண் ப்ரெட் உடன் பரிமாறவும்.