ப்ரெஞ்சு பாஸ்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - ஒரு கப் வெங்காயம் - ஒன்று கேரட் - 2 வேக வைத்த பீன்ஸ் /பட்டாணி - கால் கப் டொமேட்டோ ப்யுரி - 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி மிளகு தூள் - காரத்திற்கேற்ப உலர்ந்த தயம் (thym ) இலை - சிறிதளவு வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு

தண்ணீர் - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவி கொள்ளவும்.

பாஸ்தாவை நன்கு உதிர் உதிராக வேக வைத்து வடித்து கொள்ளவும். வடித்தவுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால்

நல்ல மணத்துடன்

ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கவும்.

வெண்ணெய் உருகியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

பச்சை வாசனை போனதும்

துருவிய கேரட்டை சேர்த்து அரை பதம் வேகும் வரை வதக்கவும்.

பின்பு வேக வைத்த பீன்ஸ் /பட்டாணி போடவும்.

ஒரு கிளறு கிளறி டொமேட்டோ ப்யுரியை சேர்க்கவும்.

பின்பு சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்து கெட்டியாகும் போது அடுப்பை அணைத்து தயம்(thym ) இலை

மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

சுட சுட பாஸ்தாவுடன் பரிமாறலாம். ப்ரான்ஸ் போன்ற நாடுகளில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் இந்த சாஸ்க்கு பெயர் napolitaine என்பர். இதில் இஞ்சி சேர்த்திருக்க மாட்டார்கள்.

குறிப்புகள்: