ப்ராக்கோலி பருப்பு உசிலி
தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி பூக்கள் - 2 கப் கடலைப்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் - 6 (அ) 7 பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - முக்கால் தேக்கரண்டி சீரகம் - முக்கால் தேக்கரண்டி பெருங்காயம் - ஒரு சிட்டிகை எண்ணெய் - ஒன்று (அ) இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
ப்ராக்கோலிப் பூக்களைச் சுத்தம் செய்து தண்ணீரை வடியவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பைக் கழுவி சிறிது தண்ணீர் ஊற்றி 30 - 40 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஊறவைத்த கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் (4 அல்லது 5)
பெருஞ்சீரகம் மற்றும் சிறிதளவு உப்புச் சேர்த்து
சிறிது நீர் விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த பருப்புக் கலவையை கிண்ணத்தில் போட்டு மைக்ரோவேவ் அவனில் வைத்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
2 நிமிடங்களுக்கு பிறகும் பருப்புக் கலவை வேகாதது போல இருந்தால் சிறு கரண்டியால் கலந்துவிட்டு மீண்டும் சில நொடிகள் மட்டும் அவனில் வைத்தெடுக்கவும். (வேகும் நேரம் மைக்ரோவேவ் அவனைப் பொறுத்து மாறுபடும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரித்து சரியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்). வெந்ததும் பருப்புக் கலவை கை பொறுக்கும் சூட்டுடன் இருக்கும் போதே கைகளால் உடைத்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும்
கடுகு போட்டுப் பொரிந்ததும்
உளுத்தம் பருப்பு சேர்த்து சற்று சிவக்கவிடவும். அதனுடன் இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாயைச் சேர்த்து
சீரகம்
கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் அனைத்தையும் சேர்க்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள ப்ராக்கோலித் துண்டுகளைப் போட்டு
ஒரு சில நிமிடங்கள் வதக்கி
காய்க்கு தேவையான உப்புச் சேர்த்து கலந்துவிட்டு மூடி போட்டு குறைந்த தீயில் வேகவிடவும்.
5 - 6 நிமிடங்களில் காய் சற்று வெந்ததும்
உதிர்த்து வைத்துள்ளப் பருப்புக் கலவையைச் சேர்க்கவும்.
நன்கு கலந்துவிட்டு சில நிமிடங்கள் மூடி போடாமல் வதக்கி இறக்கவும்.
சுலபமான
சுவையான ப்ராக்கோலி பருப்பு உசிலி தயார்.