ப்ராக்கலி (Broccoli) மசாலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ராக்கலி - 2 கப் (சிறிய பூக்களாக நறுக்கியது) தாளிக்க: எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/8 தேக்கரண்டி பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) மசாலா தயாரிக்க: கடலை மாவு (பேசன்) - அரை கப் கரம் மசாலா - கால் தேக்கரண்டி ஆம்சூர் (மாவற்றல்) பொடி - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி சீரகத்தூள் - கால் தேக்கரண்டி தனியாதூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி (அ) சுவைக்கேற்ப எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிறிய பூக்களாக நறுக்கிய ப்ராக்கலியை தண்ணீரில் அலசி நன்கு சுத்தமா தண்ணீரை வடித்து விடவும்.

ஒரு வாணலியில்

ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு

எண்ணெய் சூடானதும் சீரகம்

பெருங்காயத்தூள் போட்டு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு

பச்சைமிளகாயை போட்டு சில நொடிகள் வதக்கவும்.

அடுத்து ப்ராக்கலியை போட்டு

தாளித்த‌ எண்ணெய் எல்லா பூக்களிலும் படுமாறு பிரட்டிவிட்டு

ஒரு மூடிபோட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வேகவிடவும். அடுப்பை குறைந்த அனலில் வைக்கவும்.

3 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை திறந்து

சிறிது உப்பு தூவி கலந்துவிட்டு மேலும் ஒரு 2 நிமிடங்களுக்கு மூடி வேகவிடவும்.

வேறு ஒரு பாத்திரத்தில்

மசாலா தயாரிக்க கொடுத்துள்ள பொடிகளை எல்லாம் ஒன்றாகப்போட்டு

உப்பும் சேர்த்து (ஏற்கனவே ப்ராக்கலி துண்டுகளில் உப்பு சேர்த்து இருப்பதால்

குறைத்து வேண்டிய அளவு உப்பு சேர்க்கவும்) கலந்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை இதில் விட்டு

மாவுக்கலவையை கையால் கலந்துவிட்டு

எண்ணெய் நன்கு மாவுக்கலவையில் சேருமாறு கொஞ்சம் பிசறி விடவும்.

அடுத்து

மூடியை திறந்து கலந்து வைத்திருக்கும் மசாலாக் கலவையை எல்லா ப்ராக்கலி துண்டுகளின் மீதும் படுமாறு பரவலாக தூவி

மறுபடியும் வாணலியை மூடிவிடவும். (இப்போது கலந்து விடக்கூடாது.)

இப்படியே ஒரு 5 நிமிடம் வெந்ததும்

மூடியைத் திறந்து லேசாக தண்ணீர் தெளித்து

மாவுக்கலவை எல்லா பூக்களின் மீதும் படுமாறு பிரட்டி விடவும். மீண்டும் மூடியிட்டு

3 நிமிடங்கள் வேகவிடவும்.

எல்லாம் சேர்ந்து வெந்து காய் முறுவலாக தெரியும் பக்குவத்தில்

விருப்பப்பட்டால்

சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இப்போது

சுவையான பேசன் ப்ராக்கலி மசாலா தயார்! இதை வெறும் பருப்பு/ரசம் சாதத்துடன் சாப்பிடலாம். சப்பாத்திக்கும் வித்தியாசமானதொரு நல்ல சைட் டிஷ்ஷாக இருக்கும்.

குறிப்புகள்: