ப்ராக்கலி ஃப்ரிடாட்டா
தேவையான பொருட்கள்:
ப்ராக்கலி பூக்கள் - 2 கப் முட்டை - 6 துருவிய சீஸ் - 1/3 கப் சிகப்பு வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு) ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். ப்ராக்கலி பூக்களை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில்
4 முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதனுடன் மற்ற இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து சிறிது உப்பு
மிளகுத் தூள் கலந்து அடித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற இரும்பு (Cast Iron Skillet) தவாவில் எண்ணெயை விட்டு சூடாக்கவும். வெங்காயம் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
பின் ப்ராக்கலி துண்டுகளை சேர்த்து வதக்கவும். ஏற்கனவே வெந்திருப்பதால்
ப்ராக்கலி சிறிது வதங்கினாலே போதுமானது.
வெங்காயம் மற்றும் ப்ராக்கலி கலவையை பரவலாக வைத்து
அதன் மேல் கலக்கி வைத்திருக்கும் முட்டை கலவையை காய்களின் மேல் முழுவதும் படுமாறு பரவலாக ஊற்றவும்.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். சுமார் ஒரு 5 - 7 நிமிடங்களில்
ஓரம் கெட்டியாகவும்
நடுவில் கொஞ்சம் நீர்ப்பதமாகவும் இருப்பதுப்போல தெரியும்போது
துருவிய சீஸ் தூவி விடவும். விருப்பப்பட்டால் மேலும் சிறிது மிளகுத் தூள் தூவலாம்.
பின்னர் அவனை ப்ராய்ல் (Broil) செட்டிங்கில் வைத்து
இந்த பேனை அதில் வைத்து
சீஸ் உருகி மேற்பரப்பு கெட்டிப்பட ஆரம்பமாகும் போது வெளியே எடுத்துவிடவும்.
பிறகு துண்டுகள் போட்டு பரிமாறவும். சுவையான ப்ராக்கலி ஃப்ரிடாட்டா (Broccoli Frittata) தயார்.