பொரித்த கத்தரிக்காய் கறி
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 250 கிராம்
வினிகர் - 2 மேசைக்கரண்டி
கடுகு (அரைத்தது) - 2 தேக்கரண்டி
மிளகு (அரைத்தது) - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கத்தரிக்காயை சுத்தம் செய்து இரண்டு இஞ்சிற்கு நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் சட்டியை வைத்து சூடாக்கவும்.
சட்டி சூடானதும் சட்டியில் எண்ணெயை விட்டு சூடாக்கி கத்தரிக்காயை பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
பொரித்த கத்தரிக்காயில் இருந்து எண்ணெயை நன்றாக வடிக்கவும். அதன் பின்பு அடுப்பில் இன்னொரு சட்டி வைத்து சூடாக்கவும்.
சட்டி சூடானதும் சட்டியில் வினிகர், கடுகு (அரைத்தது), மிளகு(அரைத்தது), மஞ்சள்தூள், உப்பு ஆகிய பொருட்களையும் சேர்த்து கொதிநிலைக்கு வரும் வரை சூடாக்கவும்.
கொதித்த கலவையில் பொரித்த கத்தரிக்காயை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். அதன் பின்பு சுவையான கத்தரிக்காய்கறி தயாராகிவிடும்.
குறிப்புகள்:
இலங்கை மக்கள் பொரித்த கத்தரிக்காய் கறியை மிகவும் விரும்பி உண்பார்கள். கத்தரிக்காய் கறி இலங்கையில் மிகவும் பிரச்சித்தம் பெற்ற ஒரு உணவு பதார்த்தம்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள் - சூடான எண்ணெயை கவனமாக பாவிக்கவும். எச்சரிக்கை - கத்தரிக்காய் அலர்ஜி உடையவர்களும், இருதய நோயாளரும் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.