பொரித்து இடித்த சம்பல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

செத்தல் மிளகாய் - 10 பூண்டு - 3 பற்கள் இஞ்சி - பூண்டின் ஒரு பல்லளவு தேங்காய் - ஒன்று (சிறியது) பெருஞ்சீரகம்/சோம்பு - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவை அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம்

பூண்டு

இஞ்சியைத் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். (இஞ்சி

பூண்டை

துண்டாக்கினால் போதும் சின்னதாக நறுக்க வேண்டாம்).

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சி

பூண்டு

மிளகாய் வற்றல் போட்டு குறைந்த தீயில் வதக்கவும்/பொரிக்கவும்.

நிறம் மாறியதும்

சோம்பு

பாதிக் கறிவேப்பிலை போட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.

உரலில் வதக்கியவற்றைப் போட்டு

உப்பு சேர்த்து நன்கு இடிக்கவும்.

நன்கு மசிந்ததும் சிறிது சிறிதாக தேங்காய்ப்பூவைச் சேர்த்து இடிக்கவும்.

எல்லாம் நன்கு சேர்ந்து இடிப்பட்டதும் வெங்காயம்

மீதியுள்ள கறிவேப்பிலை சேர்த்து இடிக்கவும். வெங்காயம் அதிகம் மசியத் தேவையில்லை.

சுவையான சம்பல் ரெடி. இது

புட்டு

இடியப்பம்

தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குறிப்பினை திருமதி. அதிரா அவர்கள் நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: