பொடேடோ வித் சிக்கன் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - ஆறு
உருளைக்கிழங்கு - ஒன்று (வேக வைத்து மதித்து கொள்ளவும்)
சிக்கன் - நூறு கிராம்
சிறிய பட்டை - ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தக்காளி - கால்
கொத்தமல்லி தழை - ஒரு தேக்கரண்டி
பட்டர் - ப்ரெட்டில் தேய்க்க தேவையான அளவு
மயானஸ் - ப்ரெட்டில் தேய்க்க தேவையான அளவு
டொமேடோ கெட்சப் - கொஞ்சம்
செய்முறை:
முதலில் சிக்கனை ரெடி பண்ணி கொள்ளவும்.எண்ணெயை காய வைத்து பட்டை போட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் அடுத்து கொத்தமல்லி, சிக்கன் (கீமா செய்து கொள்ளவும் (அ) வேக வைத்து உதித்து கொள்ளவும்.) தக்காளி, மிளகாய் தூள், உப்பு போட்டு தண்ணீர் விடாமல் வதக்கி ஆற வைக்கவும்.
ப்ரெட்டை ஒரங்களை எடுத்து விட்டு முக்கோண வடிவில் கட் பண்ணவும்.
கட் பண்ணி ஒரு சைடில் பட்டர் தடவி அதில் மசித்த உருளைக்கிழங்கை வைத்து பரத்தவும்.
மற்றொரு சைடில் மயானஸை தடவி சிக்கன் கலவையை தூவி பரத்தவும். இப்போது கொஞ்சம் டொமேடோ கெட்சப் தெளித்து இரண்டையும் மூடவும்
இப்படியே அனைத்தையும் செய்யவும்.
குறிப்புகள்:
உங்கள் செல்ல குழந்தைகளை சாப்பிட வைக்க இதோ ஒரு புதிய சாண்ட்விச்
மீதி கலவை இருந்தால் ப்ரிட்ஜில் வையுங்கள் அடுத்த நாள் செய்ய ஈசியாக இருக்கு, ஆனால் மீதியெல்லாம் ஆகாது. சூப்பராக இருக்கும்.