பேக்ட் பஃபல்லோ விங்ஸ்
தேவையான பொருட்கள்:
சிக்கன் விங்ஸ் - 12
ஹாட் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
தயிர் அல்லது லைம் ஜூஸ் - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரைஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பப்ரிக்கா பவுடர் -1- 2 பின்ச்
கார்ன் மாவு - 1 -2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
சிக்கன் விங்ஸ் தோலுடன் வாங்கி இரண்டாக கட் பண்ணவும். லாலி பாப் மாதிரி ஒரு பாகமும், விங்ஸ் பாகமும் வரும். 12 பீஸ்- சில் 24 துண்டுகள் வரும். நன்றாக கழுவி வடிகட்டிக்கொள்ளவும். ஃபோர்க்கால் ஆங்காங்கு குத்திக்கொள்ளவும்.
சிக்கன் விங்ஸ், சில்லி பவுடர், இஞ்சிபூண்டு பேஸ்ட், ஹாட் சாஸ், சோயா சாஸ், பப்ரிக்கா பவுடர், உப்பு சேர்த்து நன்றாக ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து ஊறவைக்கவும்.
நாண்ஸ்டிக் ஃப்ரை பானில் எண்ணெய் விட்டு காய விடவும்.
சிக்கன் விங்ஸை கார்ன் மாவில் லேசாக பிரட்டி பொரித்தெடுக்கவும். பேப்பர் டிஸ்யு வைத்து எண்ணெய் இருந்தால் எடுத்து விட்டு பரிமாறவும் அல்லது முற்சூடு செய்த கேஸ் அவனில் 250 டிகிரியில் 10-`15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சூப்பர் சுவையுள்ள பஃப்பல்லோ விங்ஸ் ரெடி. இதனை பார்பிக்யூ சாஸ் ,டொமேட்டொ சாஸ் உடன் பரிமாறவும்
குறிப்புகள்:
இது கொஞ்சம் நம்ம ஸ்டைல் கலந்து இருக்கும். இதன் ருசி அனைவரையும் கவரும்.