பேக்டு தந்தூரி கிரில் பிஷ்
தேவையான பொருட்கள்:
கொடுவா மீன் பெரியது - ஆறு துண்டுகளாக போட்டது
தயிர் - 100 மில்லி
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
தந்தூரி மசாலா - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி (அ) தேவைக்கு
பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
மீனை வினிகர் சேர்த்து சுத்தம் செய்து ஆறு துண்டுகளாக போட்டு கொள்ளவும்.
மீனில் சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து வைக்கவும்.
தனியாக தயிரில் மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக்களையும் நன்கு பீட் செய்து மீனில் பரவலாக பூசவும்.
மசாலா தடவிய மீன் கலவையை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஓவன் கிரில்லில் 200 டிகிரியில் வைத்து முற்சூடுப்படுத்தி ஒரு டிரேயில் எண்ணெய் தடவி முதலில் 10 நிமிடம் வைத்து பேக் செய்யவும்.
இப்போது தண்ணீர் கீழே சிறிது தங்கி இருக்கும். மறுபடி கீழ் பாகத்தில் வைத்து பத்து நிமிடம் பேக் செய்யவும். நல்ல தண்ணீர் வற்றி மீன் வெந்து இருக்கும்.
குறிப்புகள்:
மீன் உணவு என்றாலே அனைவரும் விரும்பி உண்பது. சிலருக்கு நல்ல மொருகளாக வறுத்தால் தான் பிடிக்கும், அதை டயட் செய்பவர்கள் இப்படி பேக் செய்து சாப்பிடலாம், வெயிட்டும் போடாது. தந்தூரி மசாலா போடுவதால் இன்னும் சுவை ஜோராக இருக்கும்
மீனை எடுத்து ட்ரேயில் வைக்கும் போது அப்படியே கூட்டோடு வழித்து வைக்காமல் மீனை மட்டும் எடுத்து வைக்கவும், சிறிது தடிமனான துண்டுகளாக போடனும். இது டயட் செய்பவர்கள் இது போல் செய்யலாம். இது ரொட்டி, நாண், சப்பாத்தி, குபூஸ் போன்றவைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.