பேக்டு சிக்கன் டாக்கோ
தேவையான பொருட்கள்:
ரெடிமேட் க்ரசண்ட் ரோல் - ஒன்று மின்ஸ்டு சிக்கன் - ஒரு பவுண்ட்(Pound)/16 oz டாக்கோ சீஸனிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி திக் சால்சா - முக்கால் கப் துருவிய சீஸ் (செடார்) - முக்கால் கப் ஹலப்பீனோ மிளகாய்/மிளகுத் தூள் - காரத்திற்கேற்ப அலங்கரிக்க: தக்காளி - ஒன்று லெட்டூஸ் - சிறிது
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். அவனை 375 டிகிரியில் முற்சூடு செய்யவும்.
க்ரசண்ட் ரோலைப் பிரித்து 8X8 பேக்கிங் ட்ரேயில் வைத்து ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி ட்ரே முழுவதுமாக பரவலாக வைக்கவும். (க்ரசண்ட் ரோலில் மாவு முக்கோண வடிவத்தில் 8 துண்டுகளாக இருக்கும்). ஒரு முட்கரண்டியால் அங்கங்கே குத்திவிடவும். இதனால் பேக்கிங்கின் போது க்ரஸ்ட் உப்பி மேலெழாமல் இருக்கும்.
பிறகு ட்ரேயை அவனில் வைத்து
7 (அ) 8 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும்
மின்ஸ்டு சிக்கனை உதிர்த்து போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும். சிக்கன் வெந்து நிறம் மாறி வரும்போது
பொடியாக நறுக்கிய ஹலப்பீனோ மிளகாய்/மிளகுத் தூள் சேர்க்கவும். அதனுடன் சால்சாவையும் ஊற்றி கலந்துவிடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கலவை மிகவும் நீர்த்து போகாமல் சிறிது கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.
பிறகு ப்ரீ பேக் செய்து வைத்திருக்கும் ட்ரேயில்
தயார் செய்த ஃபில்லிங்கை கொட்டி பரப்பிவிடவும்.
அதன்மேல் துருவிய சீஸை தூவி
மீண்டும் அவனில் வைக்கவும்.
15 நிமிடங்கள் கழித்து
மேலே உள்ள சீஸ் உருகும் தறுவாயிலிருக்கும்போது வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
பிறகு அதன்மேல் பொடியாக நறுக்கிய லெட்டூஸ் மற்றும் தக்காளியை தூவவும்.
விருப்பத்திற்கேற்ப துண்டுகள் போட்டு பரிமாறவும். வெகு சுலபமாக செய்யக்கூடிய இந்த பேக்டு சிக்கன் டாக்கோ குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு மிகவும் சுவையாக இருக்கும்.