பூசணி அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் (துருவி பிழிந்தது) - 500 கிராம்

சீனி(சர்க்கரை) - 500 கிராம்

ப்ளம்ஸ் (பட்டரில் பொரித்தது) - 50 கிராம்

கயூ(முந்திரிப்பருப்பு) - 50 கிராம்

சிட்ரிக் அமிலம் - 2 சிட்டிகை

வாழைப்பழ எசன்ஸ் - 2 சிட்டிகை

மஞ்சள் நிறம் - ஒரு தேக்கரண்டி

பட்டர் - 2 தேக்கரண்டி (மட்டமாக)

செய்முறை:

கொஞ்சம் பட்டரை எடுத்து அதனை ஒரு தட்டின் எல்லா பாகங்களுக்கும் (தட்டின் உள்பாகம் முழுவதும்)பூசி வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் ஒரு தேக்கரண்டி பட்டரை போட்டு சூடாக்கிய பின்பு அதில் கயூவை (முந்திரிப்பருப்பை) போட்டு பொரிக்கவும்.

பொரித்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்பு அடுப்பில் மற்றைய தாட்சியை வைத்து அதில் தோல் நீக்கி துருவி நன்றாக பிழிந்த பூசணிக்காயை போடவும்.

அதனுடன் சீனியை (சர்க்கரை)சேர்த்து மிக மிக நன்றாக கலக்கவும். சீனி(சர்க்கரை)நன்றாக கலந்த பின்பு அதனுடன் ஒரு மேசைக்கரண்டி பட்டரை சேர்த்து காய்ச்சவும்.

இக்கலவையிலிருந்து நீர்தன்மை வற்றி திரள தொடங்கும் போது இதனுடன் மஞ்சள்நிறம், வாழைப்பழ எசன்ஸ்(பனானா எசன்ஸ்), பட்டரில் பொரித்த ப்ளம்ஸ், கயூ(முந்திரிப்பருப்பு), சிட்ரிக் அமிலம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதன் பின்பு கலந்த கலவை உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்திலிருந்தகலவையை பட்டர் பூசிவைத்திருக்கும் தட்டில் போட்டு அதனை ஒரு அங்குல தடிப்பில் நன்றாக பரவி விடவும். நன்றாக பரவியதும் அதனை நன்றாக ஆறவிடவும்.

நன்றாக ஆறியதும் விரும்பிய அளவுடைய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். அதன் பின்பு சுவையான சத்தான பூசணி அல்வா தயாராகிவிடும். இதனை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

பூசணி அல்வாவில் கார்போஹைட்ரேட், சீனி (சர்க்கரை) நார்சத்துக்கள், கொழுப்பு, புரதம், நீர், வைட்டமின் A,B1,B2,B3,B5,B6;B9,C,ஏ,K, கால்சியம், இரும்பு, மெக்னீஸியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற பல சத்துக்கள், சுவை சேர்ந்து காணப்படுகிறது இதனை செய்து சாப்பிட்டு இதன் சுவையை அறியவும். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர், பூசணிக்காய் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - பட்டர்க்கு பதிலாக மாஜரின் அல்லது நெய்யை பாவிக்கலாம். கவனிக்க வேண்டிய விசயங்கள் - தோல் நீக்கி துருவி நன்றாக பிழிந்த பூசணிக்காயை போடவும்.