பூசணிக்காய் சாலட்
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் (துருவியது) - 250 கிராம்
பச்சைமிளகாய் - 4
தேங்காய்ப்பூ - அரை கப்
தயிர் (கட்டியானது) - ஒரு கப்
உப்பு - தேவையானளவு
கடுகு - தேவையானளவு
சீரகம் - தேவையானளவு
பெருங்காயம் - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
கறிவேப்பிலை - 5 இலை (சிறியதாக வெட்டியது)
வெங்காயம் - அரைப்பாகம்
செய்முறை:
துருவிய பூசணிக்காயுடன் உப்பைச்சேர்த்து சிறிது நேரம் வைத்தால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறும் (பிரியும்) அதை வடித்துவிட்டு துருவிய பூசணிக்காயை பிழியவும் (தண்ணீர் இல்லாமல்)
பின்பு பச்சைமிளகாய், தேங்காய் இவையிரண்டையும் அரைத்து துருவிய பூசணிக்காயுடன் கலக்கவும்
பின்பு கருவப்பிலையை கலக்கவும் அத்துடன் கடுகு, சீரகம் வெங்காயம் ஒரளவு பொரிந்ததும் பின்பு பெருங்காயம் போட்டு தாளிக்கவும் பின்பு இதை பூசணிக்காயுடன் கலக்கவும்
பின்பு பரிமாறும் போது (மட்டும்) தயிர் சேர்க்கவும். இதோ பூசணிக்காய் சாலட் தயார்.
குறிப்புகள்:
பூசணிக்காயிலிருந்து பிழிந்த தண்ணீரை மோருடன் கலந்து குடித்தால் உடல் மெலியும் (இளைக்கும்) தோல் பளபளக்கும். பரிமாறும் போது (மட்டும்) தயிர் சேர்க்கவும். இல்லாவிட்டால் சலாட் பழுதடைந்துவிடும்.