புல்தோசி புஹுல்தோசி
தேவையான பொருட்கள்:
வெள்ளைப்பூசணிக்காய் - 1
சீனி - 1 ல்ப்
ரோஸ் வாட்டர் - 3 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
பூசணியை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி பிழிந்து ஒரு கடதாசியில் போடவும் (தண்ணீர் உறிஞ்சுவதற்கு).
ஒரு பாத்திரத்தில் சீனி, தண்ணீரை கலந்து பாகு காய்ச்சவும்.
பபாகு ஓரளவு தடிப்பானதும் அதனுள் ரோஸ் வாட்டர், வெட்டிவைத்த பூசணித் துண்டுகளைப் போட்டு கைவிடாது, துண்டுகள் உடையாதவாறு கிளறவும்.
பாகு நன்கு தடித்ததும் (பூசணியுள் நன்கு ஊறியதும்) நெருப்பை குறைத்து விடவும்.
பின்னர் பாத்திரத்தை இறக்கி சீனி மீண்டும் இறுகும் வரை கைவிடாது கிளறவும்.
சீனி இறுகியதும் பூசணித் துண்டுகளை ஒரு பட்டர் பூசிய தட்டில் அல்லது பாச்மன்ட் கடதாசியில் போட்டு ஆறவிடவும்.
சுவையான இனிப்பு தயார். இதனை அப்படியே சாப்பிடலாம். மற்றும் ரிச் கேக், லவ் கேக் போன்றவற்றுக்கும் போடலாம்.
குறிப்புகள்:
பொலிதீன் பைகளில் போட்டு வைத்தால் அல்லது காற்று புகாதவாறு அடைத்து வைத்தால் இது ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். சரியாக பதப்படுத்திய இனிப்புகள் பல மாதங்கள் கெடாமல் இருக்கும்.