புரோக்கோலி (Broccoli)அவியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புரோக்கோலி - ஒன்று (பெரியது (500 கிராம்)

மாஜரீன் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

தண்ணீர் - அரை டம்ளர்

செய்முறை:

புரோக்கோலியை அப்படியே பெரிய பெரிய மொட்டாக தண்டுடன் வெட்டவும். கீழ்த் தண்டையும் பாதியாக பிளந்து வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்டுப்பகுதி கீழே நிற்கும் படியாக மொட்டுக்களை அடுக்கவும்.

உப்பைத் தண்ணீரில் கரைத்து விடவும். மாஜரீனையும் போட்டு மூடியால் மூடி அடுப்பில் வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்தபின், 5 நிமிடங்கள் அடுப்பில் விடவும். பின் அடுப்பை அணைக்கவும்.

மேலும் 5 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் மூடியை நீக்கி விடவும். ஒரு தடவை மெதுவாக குலுக்கி, பிரட்டி விடவும்.

தொடர்ந்து மூடியபடி இருந்தால் அவிந்து கரைந்துவிடும், சுவை போய் விடும். கடும் பச்சை நிறமாக இருந்தால் தான் சுவையாக இருக்கும். ஆறியதும் சாப்பிடலாம்.

குறிப்புகள்:

தண்டை மெதுவாக குத்திப் பார்த்தாலே தெரிந்து விடும், அவிந்துவிட்டதா என்று. இதை பச்சையாக கூட உண்கிறார்கள்.