புரோகோலி பீஃப் வறுவல்
தேவையான பொருட்கள்:
புரோகோலி - கால் கிலோ
பீஃப் - கால் கிலோ (எலும்பில்லாதது)
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - நான்கு பல்
ஸ்ப்ரிங் ஆனியன் - இரண்டு ஸ்ரிப் (அ) பெரிய வெங்காயம் ஒன்று
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் - இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
புரோகோலியை சுத்தம் செய்து அரிந்து வைக்கவும்.
பீஃபை ஒரு இன்ச் அளவிற்கு துண்டுகளாக போடாமல் நீளமாக அரிந்து கழுவி அதை உப்பு, சிறிது சோயா சாஸ் சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கவும்.
ஒரு பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் ஸ்பிரிங் ஆனியன் பொடியாக அரிந்து வதக்கி பூண்டு சேர்த்து அரிந்து வைத்துள்ள புரோகோலி போட்டு வேக விடவும்.
பிறகு வெந்த பீஃபை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து மிளகு தூள், உப்பு, சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்புகள்:
புரோகோலி, பீஃப் இரண்டுமே ரிச் அயர்ன், ஹிமோகுளோபின் கம்மியாக உள்ளவர்கள் இதை செய்து சாப்பிடலாம்.