புரூட் சாலட் இன் கஸ்டர்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - நான்கு கப்

மிக்ஸ்ட் புரூட்ஸ் - இரண்டு கப் (ஆப்பிள், பைனாப்பிள்ல், ஸ்ராபெர்ரி, மாம்பழம், வாழைப்பழம், கருப்பு திராட்சை)

பாதாம் - ஐந்து

கஸ்டர்ட் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி

கன்டெண்ஸ்ட் மில்க் - பெரிய டின்னில் பாதி

சர்க்கரை - தேவைக்கு

குங்குமப்பூ - நான்கு இதழ்

ஜெல்லி - ஒரு கப்

ஐஸ்க்ரீம் - தேவைக்கு

செய்முறை:

முதலில் பாலை நன்கு காய்ச்சவும்.

ஒரு டம்ளர் பாலை மட்டும் எடுத்து ஆற வைத்து அதில் கண்டெண்ஸ்ட் பவுடரை கலக்கவும்.

சூடான பாலில் கலக்கினால் கொத கொத என ஆகிவிடும்.

கலக்கியதை சூடான பாலில் சாஃப்ரானையும் போட்டு(குங்குமப்பூ) கொஞ்சம் கொஞ்சமாக விட்டு காய்ச்சனும்.

அப்படியே கெட்டியாகி கொண்டே வரும்.

கன்டெண்ஸ்ட் மில்க் சேர்ப்பதால் சிறிது சர்க்கரை சேர்த்தால் போதும்.

இந்த கெட்டியாக காய்ச்சியதை நல்ல ஆற விடவும்.

அதற்குள் பாதாமை வெந்நீரில் போட்டு தோலுரித்து நீளவாக்கில் பொடியாக கட் செய்யவும்.

இப்போது பாதாம், கன்டெண்ஸ்ட் மில்க் மெயிட் டின்னையும் கலக்கவும்.

ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர விடவும்.

பழங்களை ஒரே சீராக பொடியாக கட் பண்ணவும்.

ரெடிமேட் ஜெல்லி வாங்கி வைத்து கொள்ளலாம் இல்லை வீட்டிலேயே செய்யலாம்.

ஐஸ்க்ரீம் ஏதாவது ஃப்ளேவரில் அதையும் வைத்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது முதலில் காய்ச்சிய கெட்டியான சில்லுன்னு உள்ள கஸ்டர்ட் கலவை ஒரு பெரிய குழிக்கரண்டி முழுவதும் போட்டு ஒரு கரண்டி பழக்கலவை, ஒரு ஸ்க்யூப் ஐஸ்கிரீம், கொஞ்சமாக ஜெல்லி வைத்து பரிமாறவும். ஒன்றும் மிஞ்சாது.

குறிப்புகள்:

ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜெல்லி, புரூட் சாலட் என்றால் சாப்பாடே தேவையில்லை. இதே வயறு நிரம்பிவிடும். நான் இதை நோன்பு காலங்களில் அடிக்கடி செய்வேன்.

சில பேர் பழத்தை போட்டு கலந்தே வைத்து விடுவார்கள் அது கருத்து போய்விடும் அப்ப அப்ப கலக்கினால் தான் ஃப்ரெஷாக சாப்பிட நல்லா இருக்கும். மெயினாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். உங்க இஷ்டம்