புரூட் கடற்பாசி
தேவையான பொருட்கள்:
கடற்பாசி - ஒரு கைப்பிடி
மில்க் மெயிட் - ஒரு சிறிய டின்
ரூஅப்சா(அ) ரோஸ் மில்க் எசன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை - மூன்று மேசைக்கரண்டி
ஸ்ட்ராபெர்ரி - ஐந்து
ஆரஞ்சு பழம் - இரண்டு சுளை
மாதுளை - சிறிது
செய்முறை:
கடற்பாசியை கழுவி இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் கடற்பாசியை போட்டு நன்கு காய்ச்சவேண்டும்.
சர்க்கரையையும் ரோஸ் எசன்ஸையும் சேர்க்க வேண்டும்.
நன்கு கலவை க்ரிப்பாக வரும் போது வேறு ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சை பொடியாக கட் பண்ணி போட்டு இந்த காய்ச்சிய கலவையை ஊற்ற வேண்டும்.
மேலே மாதுளை சுளை மற்றும் சிறிது குங்குமப்பூவை தூவவும்.
பிறகு குளிரூட்டியில் குளிரவைத்து நோன்பு திறக்கும் சமயத்தில் எடுத்து சாப்பிடவும்.
குறிப்புகள்:
இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் செய்யும் பலவகை கடற்பாசியில் இதுவும் ஒன்று. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். உடல் சூட்டை தணிக்கும் கடற்பாசி.
அதில் மில்க் மெயிடை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி இறக்க வேண்டும். மாம்பழ சீசனில் மாம்பழம் சேர்த்து கொள்ளலாம் சுவை அபாரமாக இருக்கும்.