பீஃப் செலரி சொத்தே

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீஃப் இறைச்சி - அரை கிலோ

செலரி இலை பொடிதாக நறுக்கியது - ஒரு கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையானது

எண்ணெய் - ஒரு மேசைக்கரன்டி

அஜினோமோட்டோ - சிறிது (விருப்பம் உள்ளவர்கள் சேர்க்கலாம்)

குடைமிளகாய் - ஒன்று

செய்முறை:

முதலில் செலரியை நறுக்கவும், இறைச்சியை ஒரு இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கி இரண்டையும் கழுவி வைக்கவும்

வெங்காயத்தை நீளவாக்கில் சிறிது தடிமனாக நறுக்கி வைக்கவும், குடைமிளகாயை கழுவி நீளவாக்கில் மெலிதாகதாக நறுக்கவும்

பிறகு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விடவும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்

பின்பு அதில் இறைச்சியை போட்டு நன்றாக வதக்கி அதில் சோயா சாஸை ஊற்றவும்.

மூடி போட்டு இறைச்சியை வேக விடவும் இறைச்சி முக்கால் பாகம் வெந்த பின்பு அதில் குடைமிளகாய், செலரி இலை சேர்த்து கிளறவும்.

அதன் பின்பு உப்பு சரி பார்த்து(சோயா சாஸில் உப்பு இருப்பதால் தேவைப்படின் உப்பு சேர்க்கவும்) சேர்க்கவும்.

கடைசியாக மிளகு தூள் அஜினோமோட்டோ சேர்த்து வெந்ததை சரிபார்த்து இறக்கவும்.

குறிப்புகள்:

இது குடைமிளகாய் இல்லாமலும் செய்யலாம், இறைச்சிக்கு பதில் டோஃபு அல்லது இறால் அல்லது பேம்பு இலைகளிலும் செய்யலாம்.