பிரொக்கோலி லெமன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரொக்கோலி - 1 (சிறியது)

பூண்டு - 2 பல்

ஆலிவ் எண்ணெய் - 1 tsp

எலுமிச்சை சாறு - 3 tsp

எலுமிச்சை ஜெஸ்ட் - 1 tsp

மிளகு - 1/2 tsp

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரொக்கோலி தண்டின் மேல் தடித்த பாகத்தை நீக்கி சிறு சிறு பூக்களாக எடுத்து வைக்கவும்.

எலுமிச்சையின் மேல் தோளை (ஜெஸ்ட்) தேக்கரண்டியால் சுரண்டி எடுக்கவும்.

கடையில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.

பிரொக்கோலி சேர்த்து 3 நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேகவைக்கவும்.

கடைசியாக உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் விடவும்.

மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் ஜெஸ்ட் சேர்த்து இறக்கவும்.

குறிப்புகள்:

ப்ரோக்கோலியில் வைட்டமின் A, C, K மற்றும் நார் சத்து நிறைந்தது. இது புற்று நோய் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இதய நோய் ஏற்படமால் தடுக்கும் சக்தி உள்ளது. 10 நிமிடம் மேல் வேக வைத்தால் இதன் சத்து வீணாகும்.