பிராஸ்டட் (Broasted) சிக்கன்
தேவையான பொருட்கள்:
உரித்த (தோலுடன்) கோழி-1 கிலோ
முட்டை-2
மைதா மாவு-5 டீஸ்பூண்
கார்ன் ஃபிளவர் பவுடர்-3 டீஸ்பூண்.
பிரெட் தூள் அல்லது கார்ன் பிளக்ஸ் தேவைக்கேற்ப
லெமன் சால்ட் -1 டீஸ்பூண்
அஜினோமோட்டோ-1 டீஸ்பூண்
எண்ணெய் (deep fry) பொறிக்கும் அளவுக்கேற்ப
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோழியை சுத்தம் செய்து 8 பெரிய துண்டுகளாக கட் பண்ணிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோழி துண்டுகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீரை எடுத்து, அதில் லெமன் சால்ட்,அஜினோமோட்டோ இவைகளை கரைத்துக் கொண்டு அதில் வெட்டி வைத்துள்ள கோழி துண்டுகளை போட்டு 3 மணி நேரத்திற்கு பிரிட்ஜில் வைக்கவும்.
பிறகு கோழி துண்டுகளை எடுத்து தண்ணீரை நன்கு வடிய விடவும்.(பிழிய கூடாது).
ஒரு தட்டில் மைதா மாவு,கார்ன் ஃபிளவர் மாவு ,(இவற்றுடன் spicy யாக வேண்டுவோர் 1 டீஸ்பூண் மிளகாத் தூள் சேர்த்து கொள்ளவும்)உப்பு இவற்றை நன்கு கலந்து,பரத்தி கொள்ளவும்.
முட்டையின் வெள்ளை கருவினில் துண்டுகளை முக்கி, பிறகு மேற் சொன்ன மாவு கலவையில் நன்கு பிரட்டி இறுதியாக பிரெட் தூள் அல்லது கார்ன் ஃபிளக்ஸ்(ஓரளவு பொடி பண்ணிய)ஸில் பிரட்டி ஒரு தட்டில் வைத்து திரும்பவும் 15 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில்(Electric Deep fryer வைத்திருப்போர் அதில் நன்கு கிரிஸ்பியாக பொறித்தெடுக்கலாம்) கோழி துண்டுகள் மூழ்கி பொறியும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த்ததும்(எண்ணெய் கொதிக்கும் அளவுக்கு சூடாகியதும்) தயார் செய்து வைத்துள்ள கோழி துண்டுகளை போட்டு லைட் பிரவுன் நிறம் வரும் வரை பொறித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
குபுஸ்,நான் ரொட்டி இவற்றுடன், கார்லிக் பேஸ்ட், தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.