பிட்டு அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி மா - 1 கப்

தேங்காய்ப்பால் - 1 1/2 கப்

பிரவுண் சீனி அல்லது துருவிய வெல்லம்/பனங்கட்டி - 3/4 கப்

தேங்காய்ப்பூ - 1/2 கப்

ஏலக்காய் - 4

உப்பு

செய்முறை:

அரிசிமாவை வறுத்து உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

மாவுக்கலவை கொழுக்கட்டை பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு தட்டில் கொட்டி ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும்.

இதனுடன் தேங்காய்ப்பூவை கலந்து ஆவியில் அவித்து எடுத்து ஆறவிடவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பாலையும் சீனியையும் போட்டு காய்ச்சவும். ஏலக்காயை குற்றி போட்டு கலக்கவும்.

சீனி கரைந்ததும் அதனுள் அவித்த பிட்டைக் கொட்டி கிளறவும்.

பால் வற்றியவுடன் இறக்கி ஒரு பட்டர் தடவிய தட்டில் கொட்டி அழுத்தி விடவும்.

சுவையான பிட்டு அல்வா தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை குரக்கன் பிட்டிலும் செய்யலாம். பனங்கட்டி (பனை வெல்லம்)சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.