பாஸ்மதி கீர் (மொகலாய் கீர்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ்- 1 கப்

பால்- 2 லிட்டர்

சீனி- 1 கப்

ஏலக்காய் தூள்- 1/4 ஸ்பூன்

கோயா அல்லது கண்டன்ஸ்டன்மில்க்- 1/2 கப்

செய்முறை:

பாஸ்மதியை கழுவி முதல் 2 மணி நேரம் ஊற விடவும்

பின் நீரை முழுவதுமாக பிரித்து வெயிலில் உலர்த்தவும்

காய்ந்ததும் மிக்ஸியில் பாதியாக அரைக்கவும்.

வெறும் வாணலியில் பொடித்த அரிசியை மெல்லிய பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

பாலை நீர் ஊற்றாமல் காய்ச்சவும். அதில் வறுத்த அரிசி குருணையை போட்டு அரிசி வேகும் வரை கிளறவும்.

கடைசியில் ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு, கோயா சேர்த்து கிளறி இறக்கவும்.

சூடு ஆறியதும் ப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்.

குறிப்புகள்:

நோன்பு வேளைகளிலும், கோடைகாலங்களிலும் உத்திர பிரதேஷத்தில் அதிகமாக செய்யப்படும் கீர் வகைகளில் இதுவும் ஒன்று. தேவைபட்டால் நெய்யில் முந்திரி,திராட்சை,ஏலக்காய் வறுத்து சேர்க்கலாம்.