பாவ் பாஜி மசாலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைக்க:

பீன்ஸ், உருளை, காலிஃப்ளவர், பட்டாணி, கேரட் - கால் கிலோ

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

தாளிக்க:

ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி

வெங்காயம் - இரண்டு

தக்காளி - ஒன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - - இரண்டு

குடை மிளகாய் - கால் கப்

பாவ் பாஜி மசாலா - ஒரு மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

கடைசியில் தூவ:

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிது

லெமென் ஜூஸ் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - பாதி

செய்முறை:

காய்கறிகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் எட்டு விசில் விட்டு வேக வைத்து லேசாக மசித்து கொள்ளவும்.

பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தாளிக்கவும், எண்ணெய் ஊற்றியதும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு நன்கு வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி குடைமிளகாய், பச்சை மிளகாய் போடவும். பிறகு தக்காளியும் பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.

பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பாவ் பாஜி மசாலா சேர்த்து நல்ல வதக்கி வேக வைத்து மசித்து வைத்துள்ள காய்களை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.

பிறகு கடைசியில் ஒரு மேசைக்கரண்டி பட்டரை போட்டு கொத்தமல்லி தழை தூவி எலுமிச்சை சாறு சேர்த்து வட்ட வடிவமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே அழகாக அலங்கரித்து சாப்பிடவும்.

குறிப்புகள்:

சுவையான பாவ் பாஜி மசாலா செய்து பன்னுடன் சாப்பிட்டு, சூடாக ஒரு கரம் மசாலா சாய் குடிங்க.

இந்த பன்னை பட்டரில் பொரித்து அதற்கு தொட்டு சாப்பிடலாம். இல்லை ரொட்டிக்கும் நல்லா இருக்கும்.