பார்மஜான் சிப்ஸ் (Parmesan chips)
0
தேவையான பொருட்கள்:
துருவிய பார்மஜான் சீஸ் - 1 கப்
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அவனை 325 F முற்சுடு செய்யவும்.
நாண் ஸ்டிக் பேக்கிங் ட்ரெயில் துருவிய பார்மஜான் சீஸை 1 தேக்கரண்டி அளவு எடுத்து ட்ரெயில் வைத்து ஸ்பூனினால் லேசாக பரப்பி விடவும்.
இப்படியே அனைத்து சீஸையும் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
ஒவ்வொரு பரப்பிய பார்மஜான் சீஸ் மீதும் சிறிது மிளகு தூள் தூவ்வும்..
பிறகு முற்சூடு செய்து உள்ள அவனில் 6 நிமிடம் வைக்கவும்.
ட்ரெயினை எடுத்து வெளியில் வைத்து 10 நிமிடம் ஆறவிடவும்.
இப்பொழுது பார்மஜான் சிப்ஸ் ரெடி.
மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
நாம் எப்பொழுதும் உருளைக்கிழங்கு சிப்ஸ் தான் சாப்பிடுவோம். இதை சாப்பிட்டு பாருங்கள் வித்தியாசமான சுவையாக இருக்கும்.