பான் ப்ரெட்
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் துண்டுகள் - 10 முட்டை - 3 பால் - 3 கப் சீனி - ஒரு கப் ஆரெஞ்ச் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி / வெனிலா எசன்ஸ் உலர்ந்த திராட்சை
செய்முறை:
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பாலுடன் முட்டை
சீனி மற்றும் எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அத்துடன் சிறு துண்டுகளாக்கிய ப்ரெட்டைச் சேர்த்துக் கலந்து
பட்டர் பூசிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
பிறகு உலர்ந்த திராட்சை தூவி முற்சூடு செய்த அவனில் 150 - ல் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுவையான பான் ப்ரெட் தயார்.