பான்புகியோ ரிஹா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பான்புகியோ - பாதி வெங்காயம் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது எலுமிச்சை பழம் - பாதி உப்பு

எண்ணெய் மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி அரைக்க: தேங்காய் துருவல் (ஹுனி) - கால் கப் வறுத்த சீரகம் - அரை தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - பாதி பல் பச்சை மிளகாய் - 2

செய்முறை:

காயை பாதியாக நறுக்கி தோல் நீக்கி

நடுவே உள்ள தண்டு போன்ற பகுதியை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உடனே நீரில் போடவும். இல்லை என்றால் கருத்துவிடும். சிலவற்றில் பால் அதிகம் வரும்

கையில் எண்ணெய் தேய்த்து கொண்டு செய்தால் ஒட்டாது.

அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸில் போட்டு தேவையான நீர் விட்டு நைசாக அரைக்கவும்.

காயுடன்

பொடியாக நறுக்கிய பாதி வெங்காயமும் சேர்த்து நீர் விட்டு மூடி வேக விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதம் உள்ள பாதி வெங்காயம்

கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதில் வெந்த காயை சேர்த்து பிரட்டவும்.

பின் அரைத்த விழுது

மஞ்சள் தூள்

உப்பு

தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து எடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். சுவையான பான்புகியோ ரிஹா தயார்.

மாலத்தீவு சமையலில் அனுபவம் உள்ள திருமதி. சோனாலி ரவி அவர்கள் செய்து காட்டியது.

குறிப்புகள்: