பாசிப்பயறு டோஸ்டர்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு(பருப்பு)(ஊறவைத்தது) - ஒரு கப்

பாண் துண்டுகள் - 6

பச்சைமிளகாய் - 2

உள்ளி (பூண்டு) - 4

பட்டர் - தேவையானளவு

கறிவேப்பிலை (சிறிதுசிறிதாக வெட்டியது) - சிறிதளவு

உப்பு - தேவையானளவு

செய்முறை:

கிரைண்டரில் பாசிப்பயறு(பருப்பு), பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு), உப்பு ஆகியவற்றை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்தவற்றை போடவும்.

பின்பு அதனுடன் கறிவேப்பிலையை, ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து கலக்கவும். பின்பு பாண் துண்டுகளின் மேல் பட்டர் பூசவும்.

அதன் மேல் இக்கலவையை தடவவும் பின்பு அதை டோஸ்ட் செய்யவும். பின்பு டோஸ்ட் செய்தவற்றை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

பாசிப்பயறு டோஸ்டர் செய்வதற்கு இலகுவானதும் சுவையானதும் சத்துக்கள் நிறைந்ததுமான ஒர் சிற்றுண்டி ஆகும். எச்சரிக்கை - இருதய நோயாளர், பாசிப்பயறு அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கிரைண்டரில் பாசிப்பயறு(பருப்பு), பச்சை மிளகாய், உள்ளி(பூண்டு), உப்பு ஆகியவற்றை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்), பின்பு அதனுடன் கறிவேப்பிலையை, ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து கலக்கவும்.