பஹாரா பைங்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - அரைக் கிலோ வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - 6 மல்லி இலை - சிறிய கட்டு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு புளி பேஸ்ட் - 3 மேசைக்கரண்டி எண்ணெய்

உப்பு - தேவையான அளவு பஹாரா செய்ய : வெந்தயம் - கால் தேக்கரண்டி கலோஞ்சி - கால் தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 5 கறிவேப்பிலை - நான்கைந்து இலை தேங்காய் - கால் மூடி முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி எள் - ஒரு மேசைக்கரண்டி வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி கசகசா - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

பஹாரா செய்ய தேவையானவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில்லாமல் வறுத்து வைக்கவும்.

சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

மேலே வறுத்து வைத்த பொருட்களுடன் வெங்காயமும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காயை கழுவி நான்காக கீறி வைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கத்தரிக்காயை நன்கு வதக்கவும். பாதி அளவுக்கு வெந்ததும் எடுத்து வைக்கவும்.

சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது

கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு பச்சை வாசம் அடங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். மசாலா நன்கு கொதித்ததும் (ஐந்து முதல் எட்டு நிமிடம் கழித்து) தூள் வகைகள் மற்றும் புளி பேஸ்ட் சேர்க்கவும் .

இதனுடன் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் உப்பு சேர்த்து தேவையெனில் தண்ணீர் தெளித்து விடவும். தீயை நன்கு குறைத்து வைக்கவும். கத்தரிக்காயில் மசாலா நன்றாக ஏறி எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான ஹைதராபாதி பஹாரா பைங்கன் தயார். கீ ரைஸ்

புலாவ்

ஜீரா ரைஸ்

ப்ளெயின் ரைஸ் எல்லாவற்றுக்கும் பொருத்தமான காம்பினேஷன்.

குறிப்புகள்: